பூண்டு முட்டை சாதம் ரெசிபி..!

பூண்டு முட்டை சாதம் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

 

சமைக்க தேவையானவை

 சாதம் - ஒரு கோப்பை முட்டை - இரண்டு பூண்டு - 8 பல் (பெரியது) உப்பு - சிறிது சின்ன வெங்காயம் - 5 மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி

உணவு செய்முறை

முதலில் முட்டையை நன்கு அடித்து அதில் மிளகு தூள் பொடித்து உப்பு ,பாதி சீரகம் சேர்த்து அடித்து வைக்கவும். நல்லெண்ணையை காயவைத்து அதில் சீரகம் சேர்த்து பூண்டை பொடியாக அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.

சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கிய வெங்காயத்தில் கலக்கி வைத்துள்ள முட்டையை பரவலாக ஊற்றி சமப்படுத்தவும்.

முட்டையை தோசை போல் சுட்டெடுக்கவும். வெந்ததும் எடுத்து வைத்திருந்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இரக்கவும். சுவையான பூண்டு முட்டை சாதம் தயார்.

More News >>