தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் பலி..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 48 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலியும் 528 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்16) ஒரே நாளில் 1515 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 61 பேரும் அடக்கம். தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 48,019 பேராக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1438 பேரையும் சேர்த்து 26,782 பேர் குணம் அடைந்துள்ளனர்.மேலும், மலேசியாவில் இருந்து வந்த ஒருவர், கத்தாரில் இருந்து வந்த ஒருவர் மற்றும் டெல்லி 4, உ.பி.2, மகாராஷ்டிரா 25, கர்நாடகா 5, குஜராத் 4, கேரளா 3, ஆந்திரா 2, ராஜஸ்தான், தெலங்கானா, ஜார்கண்டில் இருந்து தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

சென்னையில் மட்டும் நேற்று 1438 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது.செங்கல்பட்டில் நேற்று 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 3108 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 52 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 1945 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 47 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 803 பேருக்கும் இது வரை கொரோனா பரவியிருக்கிறது. நெல்லை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கியுள்ளது. மற்ற மாவட்டங்களில் அதை விடக் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது.

தமிழகத்தில் நேற்று தான் அதிகபட்சமாக கொரோனா நோயாளிகள் 49 பேர் பலியாயினர். இதை அடுத்து, சாவு எண்ணிக்கை 528 ஆக உயர்ந்தது.

More News >>