மரணமடைந்த கர்ப்பிணிக்காக போராடியவர்கள் மீது போலீஸ் காட்டுமிராண்டி தாக்குதல்

காவல் ஆய்வாளர் உதைத்ததில் கர்ப்பிணி பெண் மரணமடைந்ததை அடுத்து, அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் காட்டுமிராண்டி தாக்குதல் நடத்தியுள்ளது.

திருச்சியில் நேற்று இரவு சுமார் 07.30 மணியளவில் தஞ்சாவூர் – திருச்சி நெடுஞ்சாலையில், துவாக்குடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை பின்தொடர்ந்து சென்று காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உஷா என்ற கர்ப்பிணி பெண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.

அவரது கணவர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பதற்றமடைந்து சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அமைதியான முறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிகின்றன.

More News >>