மன அழுத்தத்தில் தனுஷ் நடிகை.. வைரஸ் தாக்கி செல்லப்பிராணிகள் இறந்தன..

கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபாமா பரமேஸ்வரன்.இவர் மன அழுத்தத்திலிருக்கிறாராம். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறும்போது,.கடந்த 2 வாரமாகவே நான் சோகத்திலும் மன அழுத்தத்திலும் இருக்கிறேன். அதற்கு காரணம் நான் வளர்க்கும் 3 நாய்க் குட்டிகளில் 2 குட்டிகள் பார்வோ வைரஸ் தாக்கி இறந்துவிட்டன.

அவைகளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் அவற்றின் மீது கவனமாக இருங்கள். என்னால் இரண்டு நாய்கள் இறந்த துக்கத்திலிருந்து மீள முடியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார் அனுபாமா பரமேஸ்வரன்.

More News >>