ராஷ்மிகாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது.. விஜய் படத்தில் ஜோடி சேர்கிறார்..

நடிகை ராஷ்மிகா தெலுங்கு படங்களில் சக்கை போடு போடும் நிலையில் தமிழிலும் அவருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்தி ஜோடியாகத் தமிழில் அறிமுகமாகிறார் ராஷ்மிகா. இந்நிலையில் விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. ஏற்கனவே காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் ராஷ்மிகாவும் இப்படத்தில் இணைவார் என்ற தகவல் படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த தகவல் படத் தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை.

More News >>