3டி படத்தில் விஜய் ஜேசுதாஸ்.. துபாய். மலேசியாவில் ஷூட்டிங்..

படைவீரன் படத்தில் நடித்த விஜய் ஜேசுதாஸ் அடுத்து சல்மான் என்ற படத்தில் நடிக்கிறார். புது இயக்குனர் ஷலில்குமார் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். இந்தி, பெங்காலி மற்றும் பாஞ்சாப் மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இது பற்றி விஜய் ஜேசுதாஸ் கூறும்போது, கடந்த நவம்பர் மாதம் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதுவொரு திரில்லர் படம். துபாய். மலேசியா, குளுமனாலி, கேரளா, மற்றும் ராமோஜிராலவ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. 3டி படமாக இது உருவாகிறது என்றார்.

More News >>