நடிகர் பிருத்விராஜ் பட இயக்குனர் 47 வயதில் மரணம்.. ஐய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கியவர்..

நடிகர் பிரித்விராஜ். பிஜுமேனன் நடித்த மலையாள படம் ஐய்யப்பனும் கோஷியும். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. சச்சி என்கிற கே.ஆர்.சச்சிதானந்தம் இயக்கினார். இந்நிலையில் சச்சிதானந்தம் சில தினங்களுக்கு முன் திருச்சூரில் உள்ள இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார்.

இதையடுத்து அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி சச்சிதானந்தம் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. ஐய்யப்பனும் கோஷியும் படத்தைத் தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர்.

More News >>