ரஜினி நடிப்பில் பேட்ட 2 உண்டா? இயக்குனர் பதில்..

ரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் பேட்ட. இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இது குறித்து கார்த்திக் சுப்பராஜிடம் கேட்ட போது,பேட்ட ரிலீஸ் ஆன போதே இது பற்றி பலரும் பேசினார்கள். ரசிகர்களும் அதுபற்றி நிறையக் கதைகள் போட்டார்கள். அது பற்றி நண்பர்களும் என்னிடம் பேசினார்கள்.

ஆனால் இப்போதைக்கு பேட்ட 2ம் பாகம் ஐடியா எதுவும் யோசனையில் இல்லை. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்தால் அப்போது உருவாக வாய்ப்பிருக்கிறது என்றார்.கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் ஒடிடி தளத்தில் வெளியாகுமா என்றதற்கு அப்படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என்று இயக்குனர் தரப்பு சொல்கிறது.

More News >>