விஜய் அரசியல் பிரவேசம்: லாக்டவுனில் பெரும் பரபரப்பு.. கமலுடன் கைகோர்ப்பா?

தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் முடக்கப்பட்டது போல் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் செய்ய முடியாமலிருக்கிறது. நாளை மறு தினம் 22ம் தேதி விஜய்யின் பிறந்த தினம் அன்றைத் தினம் மாஸ்டர் பட ரிலிஸ் பற்றிய அறிவிப்பு வரும். அப்படத்தின் டிரெய்லர் வரும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிரடியாக மற்றொரு தகவல் பரவத் தொடங்கி உள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றியது தான் அது.

விஜய் பிறந்த தினத்தையொட்டி மதுரையில் ரசிகர் வெளியிட்ட ஒரு போஸ்ட்டரில் சிவாஜி, கமல் ஆகியோருடன் விஜய் இருப்பது போன்ற படங்கள் இடம் பெற்றுள்ளதுடன் அரசியல் என்ட்ரி எனவும் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ரஜினியின் படம் இடம் பெறவில்லை. கமல் படம் போஸ்டரில் உள்ளதால் கமல் கட்சியுடன் விஜய் கைகோர்ப்பார் என்றும் கூறப்படுகிறது.லாக்ட்வுனில் எல்லாமே முடக்கப்பட்டிருக்கும் நிலையில் விஜய்யின் அரசியல் அறிவிப்பு வெளியாகும் என்ற பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பு வரவில்லை. ஆனால் ஊரடங்கில் உள்ள ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News >>