கட்டிய மனைவியுடன் செல்பி எடுத்தாலும் பிரச்சனைதான்.

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அந்நாட்டைச் சேர்ந்த பைசல்பாடுகீஷ் என்பவர், தன் மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுப்பது போல் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்,"மன்னர் சல்மானின் ஆணையை ஏற்று, காலியான கார் நிறுத்துமிடத்தில் என் மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்க தொடங்கியுள்ளேன்" என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார், அதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பும், அதே நேரத்தில் ஆதரவும் ஒன்று சேர அவருக்கு குவிந்துள்ளது, ஒரே நாளில் அவர் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாகிவிட்டார்,பலர் அவரது புகைப்பத்தை பகிர்ந்து வருகிறார்கள்,அந்நாட்டு பெண்கள் பலர் இவரது செயலை வரவேற்று பாராட்டி, தனது ஏக்கங்களை வெளிப்படுத்தி விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஆனால் எதிர்ப்பு எதிர்பார்க்காத அளவில் எழுந்துள்ளது, ஆண்கள் மத்தியில் வசை பாடியே இவரை வறுத்தெடுத்து வருகிறார்கள், தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டலும் வந்துள்ளது,இதுகுறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் விதமாக தற்போது அவர் பதிலளித்துள்ளார்,சட்டபூர்வமான வழியில் பெண்களுக்கு கார் ஓட்ட பயிற்சி அளிப்பதை தான் ஊக்கிவிப்பதாக தெரிவித்துள்ளார், மேலும் தன் மனைவி குறித்த எந்த ஒரு தகவலையும் தெரிவிக்க விரும்பவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்,பல கொலை மிரட்டல்களும் வந்துள்ளது என்பதால் அதற்காக அந்நாட்டு இணைய குற்றப்பிரிவிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இனி அரேபிய பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக சுருக்கமாக பார்ப்போம்;-

பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் கொண்ட நாடு என்றால் அது சவுதி அரேபியா தான்,ஆண்களின் பாதுகாப்பிலேயே பெண்கள் இருக்கவேண்டும் என்பதால் பெண்களால் எந்த முடிவும் சுயமாக எடுக்க முடியாது,தந்தை, சகோதரன், மகன் உள்ளிட்ட ஆண்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பெண்கள் முடிவெடுக்க முடியும்.

பெண்களுக்கு ஆண்கள் பாதுகாவலர்களாக இருப்பதை அரேபிய மதத்தலைவர்கள் ஆதரிக்கிறார்கள்.

ஆண் அனுமதி அல்லது துணையின்றி சவுதி அரேபியாவில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கவோ, வாகனம் ஓட்டவோ, வெளிநாடு செல்லவோ முடியாது. அதற்கெல்லாம் அங்கே தடை இருக்கிறது.

அந்த நடைமுறைக்கு முடிவு கட்டவேண்டும் என்று ஆயிரக்கணக்கான பெண்கள் ட்விட்டர், பேஸ்புக், போன்ற சமூக வளைதளங்கள் மூலமாக போராடி வருகிறார்கள்,1990 ஆம் ஆண்டிலிருந்தே அரேபிய பெண்கள் உரிமை சங்கங்கள், பெண்கள் வாகனம் ஓட்ட வேண்டி போராடி வருகிறார்கள், சட்டத்தை மீறி வாகனம் ஓட்டிய பல பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் பெண்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தற்போது பெண்கள் கார் ஓட்டும் தடையை நீக்கி அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்,ஆண்களைப் போல் ஓட்டுநர் பயிற்சி பெறவும், ஓட்டுநர் உரிமம் எடுக்கவும் வகை செய்து சட்ட விதிகளை தளர்த்தியுள்ளார்,அதற்கான சட்ட வரைவுகளை தயார் செய்ய அது சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு 30 நாட்கள் அவகாசம் விதித்துள்ளார்,மதகுருமார்களை சம்மதிக்க வைத்து மன்னர் சல்மான் அடிப்படைவாத ராஜ்ஜியத்தில் இந்த சீர்த்திருத்ததை மேற்கொண்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது, நல்ல நோக்கத்தோடு எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை என்று புகழாரம் சூட்டியுள்ளது,ஐ.நா.பொது செயலாளர் அன்டோனியோ கட்டாசும், அமெரிக்காவுக்கான சவுதி அரேபிய தூதர் காவித் பின் சல்மான் போன்றோர் இதை வரவேற்று பாராட்டியுள்ளனர்,அதே நேரம் மக்களிடையே எதிர்ப்பும் நிலவி வருகிறது, கட்டுக்கோப்பான நாட்டை அமெரிக்கா சூழ்ச்சி செய்து சீரழிக்க முயல்வதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்

மன்னர் சாலமனின் இளைய மகனாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சவுதி அரேபியாவில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளார்,அங்கு இதுவரை விளையாட்டுப் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட பெண்களுக்கு அனுமதி கிடையாது, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தை காண பெண்கள் அனுமதிக்கப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெண்ணிய விடுதலையின் முதல் சட்ட வடிவமாக கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் பெண்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகள் தான் இன்னும் சவுதி அரேபியாவில் புயலாக மையம் கொண்டுள்ளது,கார் ஓட்ட அனுமதி குறித்த சட்டத்தை பின்பற்றிய பைசல்பாடுகீஷ் போன்றோர்களுக்கு, மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்புகளை பார்க்கும் போது, பெண்கள் சுதந்திரமாக வாழ்வதை அந்த நாடு கொஞ்சம் கூட விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.

ஆனாலும் எல்லா புயலும் ஒரு நாள் கரையை கடந்துதானே ஆக வேண்டும்

 

More News >>