விஜய் தேவர கொண்டா பட ஸ்கிரிப்ட் மாற்றமா? நடிகை சார்மி பதில்..

நடிகை சார்மி இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். அடுத்து விஜய் தேவர கொண்டா நடிக்கும் ஃபைட்டர் படத்தைத் தயாரிக்கிறார். தெலுங்கு இந்தியில் இப்படம் தயாராகிறது. இதில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். புரி ஜெகநாத் இயக்குகிறார்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. ஊரடங்கு தடையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதன் ஸ்கிரிப்ட் மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல் பரவியது. அதுகுறித்து சார்மி பதில் அளித்தார். அவர் கூறும்போது,ஸ்கிரிப்ப்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஃபைட்டர் ஸ்கிரிப்ட் பிளாக் பஸ்டர் ஸ்கிரிப்ட் ஆகும். கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கும். இப்படத்தின் மீது சூப்பர் டூப்பர் நம்பிக்கை வைத்திருகிறோம்”என்றார் சார்மி.

More News >>