கார்த்திக் சுப்பராஜ் திட்டம் தனுஷ் வருத்தம்..

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவான படம் பெண்குயின். கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் கொரோனா லாக்டவுனால் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் ஒடிடி தளத்தில் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் தனது இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படத்தை இயக்கி உள்ளார். தனுஷ் நடிக்கும் இப்படம் மாறுபட்ட கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கிறது.

பெண்குயின் போல் ஜெகமே தந்திரம் படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த தகவல் தனுஷ் காதுக்குச் சென்றது. இதில் அவர் வருத்தம் அடைந்தாராம். ஏற்கனவே நடித்த மாரி2, அசுரன், வட சென்னை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ஈட்டிய நிலையில் ஜெகமே தந்திரம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெறும். அப்படி இருக்கும் போது இதை ஒடிடியில் வெளியிட அவசியம் இல்லை. தியேட்டர் திறக்கும் வரை காத்திருக்கலாம் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து ஒடிடியில் ஜெகமே தந்திரம் படம் வெளியிடும் எண்ணத்தைக் கைவிட்டாராம் கார்த்திக் சுப்பராஜ்.

More News >>