கர்நாடகா மாநிலத்திற்கு தனிக்கொடி அறிமுகம்
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமைய்யா, மாநிலத்திற்கு என தனிக் கொடி ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா, மாநிலத்திற்கு என தனி கொடி வேண்டும் என்பது குறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே கேட்டுக் கொண்டது. அதன்படி, கடந்த ஆண்டு கொடி வடிவமைப்பு செய்ய குழு ஓன்றையும் அமைத்தது. ஆனால், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் எதுவும் தராத நிலையில், இன்று காலை ஹம்பா நாகராஜ் தலைமையிலான கொடி வடிவமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதனை அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா தலைமை தாங்கினார்.
அப்போது, கர்நாகடக மாநிலத்திற்கான கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களுடன் நடுவில் கர்நாடக அரசின் லோகோ அமைக்கப்பட்டு உள்ளது.
தேசிய கொடி போன்று, இதற்கும் மூவர்ண கொடியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மஞ்சள் நிறம் மன்னிப்பையும், வெள்றை நிறம் அமைதியையும், சிவப்பு நிறம் துணிச்சலையும் காட்டுவதாக கொடி வடிவமைப்பு குழு கூறி உள்ளது.
இந்த கொடியை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் ஒப்புதல் கிடைத்த பிறகு அரசு நிகழ்ச்சிகளில் கொடி பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.