இது ஒரிஜினல் சிக்ஸ் பேக்.. தனுஷ் ரசிகர்கள் ஆரவாரம்..

பாலாஜி மோகன் இயக்கிய படம் மாரி 2 இப்படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் டொவினோ தாமஸுடன் தனுஷ் மோதுவார். அதில் சிக்ஸ் பேக் வைத்து கட்டுமஸ்தாக இருப்பார் தனுஷ். படம் வெளியானபோது பலரும் இது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது என விமர்சித்தனர்.

தற்போது ரசிகர் ஒருவர் மாரி 2 படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் ஒர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அது நெட்டில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் அந்த வீடியோவை ஃபார்வேர்டு செய்த வண்ணமும். லைக் கொடுத்த வண்ணமும் இருக்கின்றனர். இது தான் ஒரிஜனல் சிக்ஸ்பேக் என ஆரவாரம் செய்கின்றனர்.தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் நடிக்கிறார்.

More News >>