46வது பிறந்த தினம் விஜய்க்கு ராதிகா, காஜல், முருகதாஸ், அட்லீ, பாண்டிராஜ் வாழ்த்து

தளபதி விஜய்க்கு இன்று 46வது பிறந்த தினம். அவருக்கு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். நடிகர்கள் ஆர்யா, விஷால், எஸ்.ஜே.சூர்யா, ஜீவா, விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால், சிபிராஜ், பிரசன்னா, ஹரீஷ் கல்யாண், நிதின் சத்யா, நடிகைகள் ராதிகா சரத்குமார், காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், மன்ஞ்சிமா மோகன், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் பாண்டி ராஜ், அட்லீ, லோகேஷ் கனகராஜ் என திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நள்ளிரவில் வெளியிட்டதுடன் முதல் நபராக இரவு 12 மணிக்கு வாழ்த்து மெசேஜ் பகிர்ந்தார். மாஸ்டர் பணியாற்றிய போது உங்களுடன் இருந்ததை ஒரு நாளில் இப்படி நடந்தது என்று ஒரே வார்த்தையில் கூறி விட முடியாது. உங்களுடனிருந்த ஒவ்வொரு நிமிடமும் மறக்க முடியாது அண்ணா எனத் தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

விஜய்யின் 65வது படத்தை இயக்கவிருக்கும்ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய்க்குப் பிறந்த வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும் அமைதியும் என்றும் நிலைத்திருக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.உங்களுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறோம் என விஜய்க்குப் பிறந்த நாள் வாழ்த்து பகிர்ந்து இயக்குனர்கள் பாண்டிராஜ், அட்லி தெரிவித்துள்ளனர்.

More News >>