மணற்சிற்பத்தால் மகளிரை கவர்ந்த சுதர்சன் பட்நாயக்..!

உலக மகளிர் தினத்தையொட்டி, பஹ்ரைன் நாட்டு கடற்கரையில் பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மணற்சிற்பம் பெண்களை வெகுவாக கவர்ந்தது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர், உலகத்தில் நடக்கும் மகிழ்ச்சி மற்றும் துக்கமான நிகழ்வுகளை மணற்சிற்பம் மூலம் பிரதிபலித்து வருகிறார். இதுபோல், ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் பல்வேறு மணல் சிற்பங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்.

அந்த வகையில், நேற்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையட்டி, பஹ்ரைன் நாட்டின் கடற்கரையில் பெண்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணற்சிற்பத்தை உருவாக்கி இருந்தார்.

இதில், உலக மகளிர் தின வாழ்த்துக்களுடன் பஹ்ரைன் நாட்டு ராஜாவின் மனைவியும், பெண்களுக்கான சுப்ரீம் கவுன்சில் தலைவருமான சபிகா பிந் இப்ராகிம் அல் கைஃபாவின் உருவம் செதுக்கி மணற்சிற்பத்தை உருவாக்கியது மக்களை வெகுவாக கவர்ந்தது.

More News >>