கனடாவில் விஜய் ரசிகர்கள் உதவி.. இசை அமைப்பாளர் பரத்வாஜ் மகள் பங்கேற்பு..

நடிகர் விஜய் 46வது பிறந்தாளையொட்டி கனடாவில் விஜய் ரசிகர் மன்றத்தினர், அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி கொண்டாடினர். இந்த மன்றத்தில் இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் மற்றும் மருமகன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

கனடா மக்களுக்கு விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாக உதவி பொருட்கள் வழங்கியதையடுத்து அதனை பெற்றுக் கொண்டவர்கள் விஜய்க்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.இசையமைப்பாளர் பரத்வாஜ் விஜயை தொடர்பு கொண்டு, பிறந்தநாள் வாழ்த்துக் கூறியதுடன், கனடா ரசிகர்களின் நற்பணியையும் தெரிவித்தார்.

More News >>