தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தனுஷ் நடிக்கும் "வடசென்னை" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் வடசென்னை. இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரீயா, சமூத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், வடசென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியிடப்படும் என கூறப்பட்டது. அதன்படி, சற்றுமுன் வடசென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.இதில், போலீஸ் வேனில் இருந்து தனுஷ் விலங்குடன் இறங்கி வரும் வகையில் இந்த போஸ்டர் உள்ளது. மற்றொன்றில் தனுஷ் தனது வாயில் கூரிய கத்தி ஒன்றை வைத்திருப்பது போல் உள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் ரீலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

More News >>