விஜய் பாட்டுக்கு நடைப்பயிற்சி மெஷினில் நடனம் ஆடிய நடிகர்..

இளம் நடிகர்கள் தங்களை ரசிகர்களுக்கு வெளிக்காட்டிக்கொள்ளவும், பிரபலங்களின் மனதில் இடம் பிடிக்கவும் டெக்னிக்காக சில விஷயங்களைக் கையாளுகின்றனர். அந்த வகையில் இளம் நடிகர் அஸ்வின் நேற்று கமல்ஹாசன் போல் நடைப்பயிற்சி செய்யும் மிஷினில் நின்றபடி அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனம் ஆடி கமலிடம் பாராட்டு பெற்றார்.

நேற்று விஜய்யின் பிறந்த தினத்தையொட்டி மாஸ்டர் படத்தில் இடம் பெறும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடைப்பயிற்சி மிஷின் மீது நடனம் ஆடி கவர்ந்தார். கமல் பாடலுக்கு இருந்த பெர்பெக்ஷ்ன் விஜய் பாடலில் மிஸ்ஸிங். ஆங்காங்கே கமல் ஸ்டைல் எட்டிப்பார்த்தது. ஆனாலும் விஜய் ரசிகர்களின் பாராட்டைப் பெறத் தவறவில்லை.அஸ்வின், துருவங்கள் பதினாறு, எனை நோக்கிப் பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

More News >>