மளிகை கடை ஓனர் ஆனார் திரைப்பட இயக்குனர்..

கொரோனா வைரஸ் தொற்று உலகத்தில் பலரது அடையாளங்களை மாற்றி வருகிறது. சினிமாவில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்பெல்லாம் ஏதாவது ஒரு தொழில் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து சினிமா தயாரித்துக் கொண்டிருந்தனர். இந்த கொரோனா காலத்தில் ரூ 500 கோடிக்கும் அதிகமான முதலீடு சினிமா உலகில் முடங்கிப் போயிருக்கிறது.

வருமானம் இல்லாததால் பலர் தங்கள் அடையாளங்களை இழந்து வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர் . நானும் ஒரு பேய் தான், மவுன மழை, பாரதிபுரம், ஒரு மழை நான்கு சாரல், துணிந்து செய் போன்ற படங்களை இயக்கியவர் ஆனந்த். தற்போது சென்னை அடுத்த முகலிவாக்கத்தில் மளிகை தொடங்கி இருக்கிறார்.

நண்பர் ஒருவரிடம் கடையை வாடகைக்கு எடுத்து மளிகைக் கடை நடத்தும் ஆனந்த், திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்கு வரும் பட்சத்தில் மீண்டும் திரைப்பட தொழிலுக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறாராம்.அதேபோல் இந்தி காமெடி நடிகர் ஒருவர் திரைப்பட தொழில் முடங்கியதால் தள்ளு வண்டியில் பழங்கள் வைத்து தெரு தெருவாக் சென்று வியாபாரம் செய்து வருவதாகச் சமீபத்தில் தெரிவித்தார்.

More News >>