சுஷாந்த் தற்கொலையில் தினம் ஒரு திருப்பம்.. காதலிக்கும் நடிகரின் நண்பருக்கும் மோதல்?

பாலிவுட் இளம் திறமையான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 'எம்.எஸ். தோனி-தி அன்டோல்ட் ஸ்டோரி', 'கை போ சே', 'சிச்சோர்', 'கேதார்நாத்' மற்றும் 'டிரைவ்' போன்ற சிறந்த படங்களில் நடித்துள்ளார். சுஷாந்த்தின் மரண அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீளவில்லை. நடிகரின் மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனைக்காக இன்னும் போலீஸார் காத்திருக்கின்றனர்.

நடிகரின் காதலி என்று கூறப்பட்ட ரியா சக்ரவர்த்தியின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர். அதில் சுஷாந்தை விட்டுப் பிரிந்ததுபற்றி அவர் தெரிவித்திருக்கிறாராம்.சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானியேதான் சுஷாந்த்தை விட்டு தான் பிரியக் காரணம் என்று ரியா தெரிவித்திருக்கிறார். நாங்கள் இருந்த பிளாட்டில் சித்தார்த் இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அவரால் எனது தனிமையை (பிரை வேசி) இழந்ததாக உணர்ந்தேன். பின்னர் ஊரடங்கிற்குப் பிறகு நான் சுஷாந்த்தை விட்டு விலகிச் செல்ல வேண்டியிருந்தது, ஏனெனில் அவர் தனது நண்பர் சித்தார்த்தை எனக்காக விட்டுவிட விரும்பவில்லை என ரியா தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் சுஷாந்த் மரணம் தொடர்பாக வெளிவரும் மற்ற விவகாரங்களை மூடிமறைப்பதற்காக ரியா பற்றி இப்படி கிளப்பி விடப்படுதாகவும் சிலர் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் போலீசார் விசாரணையில் தான் உண்மை தெரியவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ரியா சக்ரபோர்த்தி துனீகா துனீகா என்ற தெலுங்கு மற்றும் மேர் டாட் கி மாருதி, சோனாலி கேபிள், ஹாஃப் கேர்ள்ஃபிரண்ட் போன்ற இந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

More News >>