பிரபல நடன இயக்குனருக்கு திடீர் மூச்சு திணறல்.. மருத்துவமனையில் அனுமதி

பாலிவுட்டில் ஷாருக்கான் படம் முதல் மாதுரி தீட்சித் படங்கள் என பல்வேறு பிரபல நடிகர், நடிகைகளுக்கு நடனம் அமைத்திருப்பவர் சரோஜ் கான். 3 முறை தேசிய விருதும் வென்றிருக்கிறார். 71 வயதாகும் இவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மும்பை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் கொரோனா இல்லை என்பது தெரிந்தது.

இதையடுத்து அவருக்கு மூச்சுத் திணறல் குணப்படுத்துவதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து மருத்துவ தரப்பில் கூறும் போது,சரோஜ்கான் இப்போது குணம் அடைந்து வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை. ஓரிரு நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவார் எனத் தெரிவிக்கப்பட்டது .

More News >>