சத்யராஜ் பட இயக்குனர் திடீர் கோபம்.. சீன பொருட்களை எரித்தார்..

சத்யராஜ் நடித்த மகா நடிகன், கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன் படங்களை இயக்கியவர் ஷக்தி சிதம்பரம். பிரபுதேவா நடித்த சார்ளி சாப்லின் படமும் இயக்கினார். கடந்த வாரம் ஒரு தடாலடி அறிக்கை வெளியிட்ட இயக்குனர், நான் பாஜ கட்சியில் சேரவில்லை என் வாழ்நாள் முழுவதும் அதிமுகவில் தான் இருப்பேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தனது வீட்டிலிருந்த சீன தயாரிப்பு பொருட்களான செல்போன், டேப் ரிக்கார்டர்கள் போன்றவற்றை நேற்று திடீரென்று தீ வைத்து எரித்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: சீனா அத்து மீறி இந்திய வீரர்கள் 20 பேர்களைக் கொன்றிருக்கிறது. அதற்குப் பதிலடி தர வேண்டும். சீனா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். சீன பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சீன தயாரிப்பு பொருட்களை எரித்தேன் என்றார் டைரக்டர் ஷக்தி சிதம்பரம்.இவர் யோகி பாபு நடிக்கும் பேய் மாமா என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

More News >>