சென்னை ராயபுரம், தண்டையார்பேட்டையில் உச்சத்தில் கொரோனா..

சென்னையில் அதிகபட்சமாக, ராயபுரம், தண்டையார் பேட்டை மண்டலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்திலும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் இது வரை 45,814 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. மண்டல வாரியாக கொரோனா பாதிப்பைக் கவனித்தால், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, திருவெற்றியூர் மண்டலத்தில் 1765 பேர், மணலி-718, மாதவரம்-1383, தண்டையார்பேட்டை-5531, ராயபுரம்-6837, திரு.வி.க.நகர்-3896, அம்பத்தூர்-1741, அண்ணா நகர்-4922, தேனாம்பேட்டை-5316, கோடம்பாக்கம்-4908, வளசரவாக்கம்-1957, ஆலந்தூர்-1124, அடையாறு-2777, பெருங்குடி-916, சோழிங்கநல்லூர்-894 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது.

சென்னையில் சுமார் 800க்கும் அதிகமான இடங்களில் கொரோனா பாதித்தவர் கண்டறியப்பட்டு, அப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் தடுக்கப்பட்டுள்ளது. ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில் அதிகமான இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக உள்ளன. மேலும், தினமும் 500, 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். குறிப்பாக, ராயபுரம், தண்டையார் பேட்டை மண்டலங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதே போல், சென்னையில் நேற்று மட்டும் 9371 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

More News >>