பாலியல் புகாரால் முஹமது ஷமிக்கு வந்தது சோதனை!
மனைவியின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை அடுத்து, வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் ஷமியின் பெயரை சேர்க்காமல் பட்டியலை நிறுத்தி வைத்துள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஷமியின் மனைவி ஹசின் ஜகான் தனது முகநூல் பக்கத்தில் ”முகமது ஷமி பல பெண் களுடன் தகாத முறையில் தொடர்பு வைத்துள்ளார். தட்டி கேட்டால் ஷமி அவரது தாய், சகோதரர் ஆகியோருடன் இணைந்து தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என பதிவிட்டுள்ளார்.
ஹசின் ஜகான் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் முகமது ஷமி பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக உள்ளார். ஆடியோ உரையாடல்கள் போன்ற ஆதாரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இந்திய கிரிக்கெட் உலகை இது அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்த விவகாரத்தை முற்றிலும் எதிர்பார்க்காத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் ஷமியின் பெயரை சேர்க்காமல் பட்டியலை நிறுத்தி வைத்துள்ளது. விசாரணைக்கு பிறகே அவரை ஒப்பந்தத்தில் சேர்ப்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.