பாரதிராஜா, நடிகை கார்த்திகா அதிர்ச்சி ரூ 1 லட்சம் மின்கட்டணமா?

பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கார்த்திகா நாயர். இவர் பிரபல நடிகை ராதாவின் மகள். கோ, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. வா டீல் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் மும்பையில் வசிக்கிறார். இவருக்கு இம்முறை மின் கட்டணமாக சுமார் ரூ 1 லட்சம் வந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி கார்த்திகா இணைய தளத்தில் கூறும்போது,என்ன விதமான ஊழல் இது. ஜூன் மின் கட்டணம் 1 லட்சம் தரப்பட்டிருக்கிறது. மீட்டர் ரீடிங் எடுக்காமல் தோராயமாக அவர்களே ஒரு தொகை போட்டிருக்கிறார்கள். இதுபோல் நிறையப் புகார் கேள்விப்படுகிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த மாதம் நடிகர் பிரசன்னாவுக்கு இதேபோல் 70 அயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்ததில் அவர் அதிர்ச்சி அடைந்து புகார் அளித்தார்.

More News >>