இயக்குனர் கோகுலின் கொரோனா குமார் பட டைட்டில் டீஸர்..

விஜய்சேதுபதி நடித்த இதற்கு தானே ஆசைப் பட்டாய் படத்தை இயக்கிய கோகுல், கொரோனா சம்பவங்களை மையமாக வைத்து கொரோனா குமார் என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றிய அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டார்.படப் பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் அப்படம் பற்றிய டைட்டில் டீஸர் ஒன்றை வெளியிட்டார்.

அதில் படத்தின் டைட்டிலை எழுதும் அவர் அருகில் இருக்கும் சரக்கு பாட்டிலிலிருந்து மதுவைக் கையில் லேசாக ஊற்றி சேனிடைசர் போல் கைகளில் தேய்த்துக் கொள்கிறார். பின்னர் இந்த ப்ளுபாட்டில் காலியாயிடுச்சி அதேமாதிரி பாட்டில் வாங்கிட்டு வந்துருங்க நைட்டு ஒருமுறை புல்லா போட்டு முடிச்சிடு வோம் என்று வசனம் பேசுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஏதோ பெரிய விஷயத்தை காமெடியாக இயக்குனர் சொல்லவிருக்கிறார் என்பதை டீஸர் உணர்த்துகிறது.

More News >>