இந்தியாவில் ஒரே நாளில் 19,459 பேருக்கு கொரோனா..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக இந்தியாவில் 90 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், சினிமா தியேட்டர்கள், மால்கள் திறக்கப்படவில்லை. ரயில் போக்குவரத்து துவங்கப்படவில்லை. ஆனாலும், கொரோனா தொற்று பரவல் கட்டுப்படவில்லை. நாடு முழுவதும் தினமும் சராசரியாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 19,459 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 லட்சத்து 48,318 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இதில் 16,475 பேர் பலியாகி விட்டனர். நேற்று மட்டுமே 380 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கொரோனா பாதித்தவர்களில் 3 லட்சத்து 21,723 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 2 லட்சத்து 10,120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் ஒரு லட்சத்து 64,626 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 2வது இடத்தில் டெல்லியில் 83,077 பேருக்கும், தமிழகத்தில் 82,275 பேருக்கும் கொரோனா பாதித்திருக்கிறது. இந்தியாவில் நேற்று 1 லட்சத்து 70,560 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது வரை 83 லட்சத்து 98,362 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதமும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

More News >>