இனி கருணை கொலை செய்யலாம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருணைக் கொலை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருணைக்கொலை செய்வதற்கு வழிமுறைகளையும் வகுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உயிர்பிழைக்க வழியில்லாதவர்களுக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்டவற்றைகளை நிறுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமர்வில் இருந்த நான்கு நீதிபதிகளுக்கும் தனித்தனியான கருத்துக்கள் இருந்தபோதிலும், நோயாளி ஒருவர் சிறந்த முறையில் இல்லாமல், கோமா நிலை போன்ற மோசமான நேரத்தில், வாழ்வதற்கான சக்தியற்ற நிலையில் அவரை கருணைக் கொலை செய்யலாம் என ஒருமனதாக தெரிவித்தனர்.

More News >>