சன்னி லியோனை முந்திய பிரியா பிரகாஷ் வாரியர்!

கண்ணடி நாயகி பிரியா பிரகாஷ் வாரியரின் மார்க்கெட் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

வலைதளங்களில் சில நாள்களுக்கு முன்னர் ஓவர்நைட்டில் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். 'ஒரு அடார் லவ்' என்ற மலையாளத் திரைப்படம் மூலம் வெளியான ஒரு பாடல் வீடியோவின் மூலம் திடீரென பிரபலமடைந்ததால் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் மில்லியன் கணக்கில் இவருக்கு ரசிகர்கள் சேரத் தொடங்கினர்.

இந்நிலையில் பிரியா வாரியரின் ரசிகர்கள் கூட்டம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க பிரபலமான நடிகை சன்னி லியோனின் ரசிகர்கள் கூட்டத்தை விட பிரியா பிரகாஷ் வாரியரின் ரசிகர் கூட்டம் டாப் இடம் பிடித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் சன்னி லியோனின் ஃபாலோயர்களை விட பிரியாவின் ஃபாலோயர்கள் அதிகரித்துள்ளனர்.

மேலும், சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில் பிரியா பிரகாஷ் வாரியரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பதியப்படும்போது அவருக்கு எட்டு லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறதாம்..!

More News >>