மாளவிகாவுக்கு ரஜினி சொல்லித் தந்த கிரியா யோகா.. நடிகை ஹேப்பி..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமார்க்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.
பேட்ட படத்தில் நடித்தபோது ரஜினி காந்த் தனக்கு யோகா, தியானம் பற்றி சொல்லித்தந்தது பற்றித் தெரிவித்தார் மாளவிகா மோகனன். அவர் கூறியதாவது:பேட்ட படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது எனக்குச் சிறிய வேடம் தான் இருந்தாலும் ரஜினி சார், கார்த்திக் சுப்பராஜ் படம் என்றதும் நடிக்க ஒப்புக் கொண்டேன். எனது தந்தையாக மகேந்திரன் நடித்திருந்தார். படப்பிடிப்பு தளத்தில் தமிழில் பேசுவது எனக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
அதைக் கண்டு ரஜினிசார் என்னை அழைத்து தைரியம் சொன்னார். குடும்பத்தினருடன் இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தினார்.பின்னர் உடலை எப்படி ஃபிட்டாக வைத்துக்கொள்வது என்பது பற்றி யோகா, மற்றும் தியானம் செய்வது பற்றி டிப்ஸ் கொடுத்தார். கிரியா யோகா பற்றியும் சொல்லித் தந்தார். அது எனக்கு இப்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் என்னை ஃபிட்டாக வைத்திருக்க இதுவும் முக்கிய காரணம் ஆகும்.இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்தார்.