பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் மரணம்..

பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ்கான் மாரடைப்பு காரணமாக நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. மூன்றுமுறை தேசிய விருது வென்றிருக்கிறார். மறக்கமுடியாத பல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் சரோஜ் கான். கடந்த வாரம் இவர் மும்பையில் உள்ள குருநானக் மருத்துவமனையில் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிந்தது.

கடந்த 40 வருடமாக இவர் பிரபல நடிகர், நடிகைகள் முதல் இளம் நடிகர் நடிகைகள் வரை பலருக்கு நடனம் அமைத்திருக்கிறார். தேசாப் படத்தில் மாதுரி தீட்சித்துக்கு ஏக் தோ தீன்.. பாடல், தேவதாஸ் படத்தில் இடம் பெற்ற டோலா ரே டோலா போன்ற பல பாடல்கள் பிரபலமானவை. கடைசியாகக் கடந்த 2019ம் ஆண்டு மாதுரி நடித்த கல்நாக் படத்துக்கு நடனம் அமைத்திருந்தார்.

More News >>