கல்லூரி வாசலிலேயே மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர்! - சென்னையில் பரபரப்பு

சென்னை கே.கே.நகரில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவியை, கல்லூரி வாசலிலேயே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தவர் அஸ்வினி. அவர் இன்று கல்லூரி முடிந்து வெளியே வந்த போது, வாலிபர் ஒருவர், மாணவி அஸ்வினியை கத்தியால் சராமாரியாக குத்தியுள்ளார். இதில், அஸ்வினி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள், படுகாயமடைந்த அஸ்வினி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அஸ்வினி உயிரிழந்துள்ளார். இதற்கிடையில் கொலை செய்த மர்ம நபரை, பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். இதன்பின், படுகாயமடைந்த அவரை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் இது குறித்து நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர், சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பது தெரியவந்துள்ளது. இவர், ஏற்கனவே பலமுறை தன்னை காதலிக்குமாறு அஸ்வினை தொந்தரவு செய்து வந்துள்ளார். இவரது தொந்தரவால் இது குறித்து அஸ்வினி புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், அஸ்வினி மதுரவாயலில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வருவதை நிறுத்திக்கொண்டு, ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரி சென்று வந்துள்ளார். இதனால், ஆத்திரத்தில் இருந்த அழகேசன் கல்லூரி வாசலில் அஸ்வினியை கொலை செய்துள்ளார்.

More News >>