கனடா நண்பர்களுடன் தளபதி விஜய் மகன்.. புதிய படம் நெட்டில் வைரல்..

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். கனடாவில் சினிமா தொடர்பான உயர் கல்வி படித்து வருகிறார். அவர் சக நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி நெட்டில் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. உடன் இருக்கும் நண்பர்கள் கோட்டு சூட்டு டை அணிந்து டிப்டாப்பாக போஸ் கொடுக்க ஜேசன் ப்ளூ நிற சட்டை அணிந்து அமைதியாக போஸ் தருகிறார்.

படிப்பு முடிந்து திரும்பி வந்ததும் ஷங்கர் இயக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாவார் என்றும், விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. மேலும் குறும்படம் ஒன்றும் ஜேசன் ஏற்கனவே இயக்கி வெளியிட்டு அது வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிப்பா? இயக்கமா? எந்த முடிவை ஜேசன் எடுப்பார் என்பது அவர் இந்தியா திரும்பிய பிறகே தெரிவரும் என்கிறது விஜய் வட்டாரம்.

More News >>