விஷால் பட கம்பெனியில் ரூ 45லட்சம் மோசடி.. போலீசில் புகார்..
நடிகர் விஷால் தனது பெயரில் விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். பல படங்கள் தயாரித்துள்ளார்.இந்நிறுவன மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம் பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:கடந்த 2015-ம் ஆண்டு முதல் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் ரம்யா என்பவர் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். சென்ற சில ஆண்டாக வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய TDS தொகையை அவர் செலுத்தவில்லை.
TDS செலுத்த வேண்டிய தொகையை தன்னுடைய கணக்கிலும் மற்றும் கணவர், உறவினர் கணக்கிலும் பரிமாற்றம் செய்து ரம்யா மோசடி செய்திருக்கிறார். மோசடி செய்த தொகை சுமார் 45 லட்ச ரூபாயும் அதற்கு மேலும் இருக்கும். ஜூன் 28-ம் தேதி அனைத்துக் கணக்கு வழக்குகளையும் ஒப்படைப்பதாக கூறிவிட்டு தலை மறைவாகிவிட்டார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன் புகாரில் கூறி உள்ளார்.