சீனப் பொருட்களை புறக்கணிக்க நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம்..

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள், திபெத்தியர்கள் மற்றும் தைவானைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் மிகவும் அதிகமாகப் பரவியுள்ளது. சீனா திட்டமிட்டு இந்த வைரஸ் நோயைப் பரப்பியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே, இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதிக்குள் சீனா அத்துமீறி நுழைந்து, ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால், இந்தியாவிலும் சீனாவுக்கு எதிரான குரல்கள் ஒலித்து வருகின்றன. சீனக் கம்பெனிகளின் 59 மொபைல் ஆப்ஸ்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.இந்த சூழலில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டைம்ஸ் ஸ்கொயரில் நேற்று சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்க இந்தியர்கள், திபெத்தியர்கள் மற்றும் தைவான் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, சீனாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து மனித உரிமை மீறல்களை அந்நாடு செய்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றாலும், உலக நாடுகளுக்கு எதிராகச் சீனா செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், சீனப் பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

More News >>