இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 18,655 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பாதித்திருக்கிறது. இந்நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவில் தினமும் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் தினமும் தொற்று கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

நேற்று ஒரே நாளில் புதிதாக 22,771 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 லட்சத்து 48.315 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் நேற்று உயிரிழந்த 442 பேரையும் சேர்த்தால் பலி எண்ணிக்கை 18,655 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 3 லட்சத்து 94227 பேர் குணம் அடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் ஒரு லட்சத்து 92,990 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இங்கு 8376 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர். 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் ஒரு லட்சத்து 2721 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழகத்தில் பலி 1385 ஆக உள்ளது. 3வது இடத்தில் டெல்லியில் 94,7675 பேருக்கு நோய் பாதித்துள்ளது. இங்கு 2923 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

More News >>