இயக்குனர் வர்மா மீது போலீசில் வழக்கு பதிவு.. மர்டர் படத்துக்கு தடை வருமா?
சர்ச்சை இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ராம் கோபால் வர்மா. அவர் இயக்கி உள்ள மர்டர் படம் ஒடிடி யில் வெளியாக உள்ளது. பிரனாய் பெருமல்லா என்பவரின் கொலையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பிரனாய் தந்தை இப்படத்தைத் தடை செய்யக் கேட்டு நலகொண்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும் படி மிர்யலங்குடா போலீசுக்கு, ராம் கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
இதையடுத்து ராம் கோபால் வர்மா தொடர்ச்சியாக டிவிட்டரில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார். யாரையும் அவமதிக்கும் வகையில் இப்படம் எடுக்கப்படவில்லை . பொது மக்களிடம் திரட்டிய கருத்துக்களின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. எனது வழக்கறிஞர் இது குறித்த பிரச்சனையை கையாள்வார் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் மர்டர் படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கும் வர்மா, மீடியாவில் இப்படத்தைப் பற்றி வரும் தகவல்களால் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது, உண்மையை அடிப்படையாகக் கொண்டு அல்ல. அத்துடன் யாருடைய பெயரையோ அல்லது சாதியையோ குறிப்பிடவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.