வேலையில்லா பட்டதாரி டைரக்டர், கேமராமேன் வேல்ராஜ் தந்தை மரணம்..

99 வயதான ராஜாமணி தனுஷின் ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, அசுரன், கார்த்தி நடித்த சிறுத்தை,விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழின் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பவர் ஆர்.வேல்ராஜ். இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார்.

டைரக்டர் ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் தந்தை எஸ்.ராஜாமணி. இவர் வயது மூப்பு காரணமாக இன்று மதியம் 1.45 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 99. மதுரை கூத்தியார் குண்டை சேர்ந்தவரான ராஜாமணி உடல் தகனம் நாளை நடக்கிறது. வேல்ராஜ் தந்தை மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News >>