உடலுக்கு குளிர்ச்சி தரும் புதினா லஸ்ஸி..

உடலுக்கு குளிர்ச்சி தரும் புதினா லஸ்ஸி எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

தேவை:

2 கப் தயிர்; 1/4 கப் புதினா இலைகள்; 1 ஸ்பூன் இஞ்சிச் சாறு; 1/2 ஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி; ; 1 சிட்டிகை கரம் மசாலா; 1 சிட்டிகை கருப்பு உப்பு; 1/2 கப் ஐஸ் துண்டுகள்; அலங்கரிக்க சிறிதளவு புதினா இலைகள்; உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

2 ஸ்புன் தயிர் சேர்த்து புதினா இலைகளை அரைத்து பேஸ்டாக்கவும். அத்துடன் தயிர், இஞ்சிச் சாறு, உப்பு , கருப்பு உப்பு ஜீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் 1 கப் தண்ணீர் அனைத்தையும் கலக்கினால், அனைத்தும் ஒன்றாகும். அதில் ஐஸ் துண்டுகளைச் சேர்த்துப் டம்ளர்களில் பறிமாறவும். புதினா இலைகள் தூவி அலங்கரிக்கவும்.

More News >>