நடிக்க வாய்ப்பு தருவதாக இயக்குனர் பெயரில் மோசடி.. பெண்களுக்கு டைரக்டர் எச்சரிக்கை..

தமிழில் துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் பெயரில் போலியாக இணைய தளத்தில் புதிய படத்துக்கு நடிகர், நடிகை தேவைப்படுகிறார்கள் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனச் செல் நம்பர் முதற்கொண்டு பகிரங்கமாகச் சிலர் நெட்டில் விளம்பரம் செய்கிறார்கள். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக் நரேன், தான் அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. யாரும் அதை நம்பி ஏமாற வேண்டாம் என்று கடந்த மாதத்தில் ஒரு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டார். அதே பாணியில் தற்போது தெலுங்கு பட இயக்குனருக்கு நேர்ந்திருக்கிறது.

ஆர்.எக்ஸ் 100 என்ற படத்தை இயக்கியவர் அஜய் பூபதி. இப்படத்தில் கார்த்திகேய கும்மகொண்டா, பாயல் ராஜ்புத் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ஹிட் ஆனது. அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் அஜய் பூபதி. அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,சைபர் கிரைம் போலீசில் நான் ஒரு புகார் அளித்திருக்கிறேன். அதில் என் பெயரைப் பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் பெண்களைப் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. நான் வெளியிட்டால் அது முறைப்படி அதிகாரப்பூர்வமான தளத்தில் இடம் பெறும் பெண்களை ஏமாற்றிச் சிக்க வைப்பதற்காக யாரோ மர்ம நபர் வெளியிட்டுள்ள விளம்பரம் போலியானது. அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>