செல்வராகவன் மாஜி மனைவி சோனியா அகர்வால் வாழ்த்து.. தனுஷ், கஸ்தூரி ராஜாவுக்கும் பாராட்டு..

தனுஷ், சோனியா அகர்வால் ஜோடியாக நடித்துக் கடந்த 1996ம் ஆண்டு திரைக்கு வந்த படம் காதல் கொண்டேன் செல்வராகவன் இயக்கி இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. காதல் கொண்டேன் படத்தில் பணியாற்றிய போது சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் நட்பு ஏற்பட்டு காதலாகி பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுப் பிரிந்ததுடன் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு அந்த குடும்பத்துடன் சோனியா தொடர்பில் இல்லை. ஆனாலும் காதல் கொண்டேன் படம் 17 வருடம் கழித்து செல்வராகவனை அவரது மாஜி மனைவி சோனியாவுக்கு நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

படம் வெளியாகி 17 வருடம் ஆனதையடுத்து சோனியா வாழ்த்து பகிர்ந்திருக்கிறார். கடவுளுக்கு நன்றி, காதல் கொண்டேன் படத்தின் மூலம் என்னைத் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய செல்வராகவன், கஸ்தூரிராஜா, தனுஷ் மற்றும் அப்படத்தில் பணியாற்றிய டெக்னிஷியன்கள், நடிகர்களுக்கும் படத்தின் 17வது ஆண்டில் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஒப்பிட முடியாத ஒரு படமாகத் தமிழ் திரையுலகில் காதல் கொண்டேன் என்றென்றும் இருக்கும் என வாழ்த்துக் கூறி உள்ளார் சோனியா அகர்வால். முன்னதாக காதல் கொண்டேன் படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆனதையடுத்து, தன் மீது நம்பிக்கை வைத்து ஹீரோயினாக அப்படத்தில் தன்னை நடிக்க வைத்த செல்வராகவனுக்கு நடிகரும் அவரது தம்பியுமான தனுஷ்க்கும் நன்றி தெரிவித்து மெசேஜ் வெளியிட்டிருந்தார்.

More News >>