பாகுபலியை விட 10 மடங்கு அதிக பிரமாண்ட படம்.. ராஜமவுலி புதிய படம் பற்றி மதன்கார்க்கி..

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிக்க ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்துக்கு வசனம் எழுதினார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. தற்போது ராஜமவுலியுடன் மீண்டும் ஒரு பிரமாண்டத்துக்குக் கைகோர்த்திருக்கிறார். ராஜமவுலி இயக்கும் படம் ஆர் ஆர் ஆர் . இப்படத்திற்குத் தமிழில் ரதம் ரணம் ரவுத்திரம் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கும் மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். அவர் கூறியதாவது: ஆர் ஆர் ஆர் (தமிழில் ரதம் ரணம் ரவுத்திரம்) உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தேச பக்தியுடன் கூடிய படமாக உருவாகிறது. பாகுபலிக்கு வசனம் எழுதியது போல் சவால் இப்படத்தில் எனக்கு இல்லை. பாகுபலி வசனத்துக்காக கிலிக்கி என்ற ஒரு புதிய மொழி உருவாக்கினேன்.

இயக்குனர் ராஜமவுலியை பொருத்தவரை வசனங்கள் சிறியதாக பவர் புல்லாக இருக்க வேண்டும் என்பார். ஆர் ஆர் ஆர் படத்தைப் பொருத்தவரை தேசபக்தி புதிரான விதத்திலும் இதுவரை பார்க்காத விஷூவலுடனும் மற்றும் எதிர்பாராத காட்சிகளுடனும் அதாவது பாகுபலியை விட 10 மடங்கு அதிக பிரமாண்டத்துடனும் சொல்லப்படுகிறது. இப்படம் மீண்டும் ரசிகர்களை தியேட்டர்களை நோக்கித் திருப்பும் என்றார் மதன் கார்க்கி. ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய்தேகன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

More News >>