சவரக்கத்தி இயக்குனருடன் தமிழுக்கு வரும் இந்திய அழகி அனுக்ரீதி வாஸ்..

மிஷ்கின், ராம். பூர்ணா இணைந்து நடித்த படம் சவரக்கத்தி. இப்படத்தை ஆதித்யா இயக்கினார்.இவர் அடுத்து பிதா என்ற படம் இயக்குகிறார்.மதி தயாரிக்கிறார். இப்படத்தில் அனுக்ரீதி வாஸ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2018 போட்டியில் அழகியாக தேர்வானவர். கலையரசன் மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் மதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தந்தை மற்றும் அவரது மகள் பற்றியக் கதையாக உருவாகிறது. காணாமல் போகும் மகளைக் கண்டு பிடிக்க ஒரு தந்தை நடத்தும் போராட்டம். இழப்புகளை மையாகக் கதை கையாள்கிறது. இயக்குனர் ஆதித்யா கூறும்போது வெப் தொடருக்கான திரைக்கதையை முடித்த போது, ஊரடங்கு வந்தது. இந்நிலையில் தான் பிதா ஸ்கிரிப்ட்டை முடித்தேன் என்றார்.

More News >>