கொரோனா பாதிப்பில் இசை அமைப்பாளர் அவதி.. மீண்டது எப்படி?
தமிழ்ப் பட இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கொரோனா தொற்றால் பட்ட விவரத்தை தற்போது வெளியிட்டார். இது பற்றி அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. லாக்டவுனுக்கு சற்று முன்பு நான். டெல்லியில் இருந்தேன். கடைசி விமானத்தில் மார்ச் 22 அன்று சென்னைக்கு வந்தேன்.நான் என் அம்மாவுடன் தங்கியிருந்தேன். எங்களுக்காக பொருட்களை பெறுவதற்காக வெளியே சென்று கொண்டிருந்த ஒரு உறவினர் மூலமாக மட்டுமே எனக்கு வைரஸ் தொற்றியிருக்கும். அவருக்கு அது தெரியாது என்று கருதுகிறேன். எனக்குத் தலைவலி மற்றும் தொண்டை வலியால் இந்த லேசான காய்ச்சல் உணர்வு இருந்தது. நான் உணர்ந்த மற்றொரு விஷயம் இந்த கேபிள் எரியும் வாசனை. நான் பாராசிட்டமால் முயற்சித்தேன், ஆனால் அது செயல்படவில்லை.
எனவே, நான் எங்கள் குடும்ப மருத்துவரை அழைத்து சோதனை செய்தேன். தொற்று இருப்பது தெரிந்தது. நான் உடனடியாக என் தாயின் இடத்திலிருந்து வெளியேறி, மற்றொரு பிளாட்டில் என்னைத் தனிமைப்படுத்தினேன். என் சகோதரிகள் உணவை வீட்டு வாசலில் வைத்து விடுவார்கள். எனக்குப் பசி இருந்தது, ஆனால் எந்தவிதமான வாசனையும் தெரியவில்லை. நான் காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொண்டேன், நீராவி பிடித்தேன். நான் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். நான் மார்பு இறுக்கத்தையும், ஆக்ஸிஜன் குறையத் தொடங்கியதும் உணர்ந்தேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட போது எல்லோரும் பயந்தார்கள், என் மனைவி, குழந்தைகள். நான் அதைப் பற்றி தொழில்துறையின் மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே கூறியிருந்தேன். அவர்கள் அனைவரும் என்னை இழக்க நேரிடும் என்று நினைத்தார்கள். அந்த பயம் என்னிடமும் இருந்தது.
யார் வேண்டுமானாலும் வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம். உங்கள் உடலைக் கவனியுங்கள். எங்குத் தொடுகிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். அவசர நிலைகளுக்கு வெளியே செல்வோர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் வைரஸை வீட்டிற்குக் கொண்டு வருபவராக இருக்கலாம். நான் குணமடைந்த பிறகு ஒரு கவிதை எழுதினேன். நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன்.இவ்வாறு ரமேஷ் விநாயகம் கூறினார்.
ஜெர்ரி, அழகிய தீயே, ராமானுஜம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். ஏ காமன்மேன் என்ற ஆங்கில படத்துக்கும் இசை அமைத்திருக்கிறார் ரமேஷ் விநாயகம்.