வரலட்சுமி நடிக்கும் ராஜபார்வை பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்.. பட உரிமையை 2 பேருக்கு விற்றதாகக் குற்றச்சாட்டு..

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராஜபார்வை. இப்படம் விற்பனை தொடர்பாக சர்ச்சை எழுத்துள்ளது. அது பற்றி கூறப்படுவதாவது:இந்தப் படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயப்பிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என். பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். வெளிநாடுகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாகத் தமிழ்ப் படங்களை வாங்கி வெளியிட்டு வரும் மலேசியப் பாண்டியன் என்பவர் இந்த பாபு ரெட்டியிடம் ராஜபார்வை படத்தின் வெளிநாட்டு உரிமையை 2௦ லட்ச ரூபாய்க்கு விலைபேசி முடித்து அதற்காக பத்து லட்ச ரூபாயும் அட்வான்ஸ் தொகையாகக் கொடுத்து விட்டாராம்.

ஆனால் கடந்த வருடம் ஜூன் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகக் கூறிய பாபுரெட்டி படத்தை முடிக்காமல் ஒரு கட்டத்தில் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையைத் திருப்பி கேட்டுள்ளார் மலேசியா பாண்டியன். ஆனால் பாபு ரெட்டி பணத்தைத் திருப்பித்தராமல் முரண்டு பிடிக்கவே, விஷயம் தென்னிந்தியத் திரைப்பட ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் அருண்பாண்டியன் கவனத்திற்குச் சென்றது. அதையடுத்து விரைவில் பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக அவர் முன்னிலையில் உறுதி அளித்தாராம் பாபுரெட்டி.

இந்த சமயத்தில் கொரோனா தாக்கம் அதன் காரணமாக, ஊரடங்கு என நிலைமையே மாறிவிட்டது. இதைப் பயன்படுத்த பாபு ரெட்டி தன்னிடமிருந்த ராஜபார்வை படத்தின் மொத்த உரிமையையும் விஜயராஜேஷ் ரங்கப்பா என்பவருக்கு விற்றுவிட்டார்.. இந்த விஜயராஜேஷ் ரங்கப்பா உடனே இந்தப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபலமான ஏபி இன்டர்நேஷனல் என்கிற நிறுவனத்துக்கு 17 லட்ச ரூபாய்க்கு விலைபேசி விற்றுவிட்டார். படத்தை இன்னொருவருக்கு விற்கும்போது ஏற்கனவே வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டதைக் கூறியிருக்க வேண்டும் அல்லது மலேசியப் பாண்டியனுக்கு அவரது அட்வான்ஸ் தொகையை திருப்பித் தந்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படிச் செய்யவில்லை.. அதுமட்டுமல்ல, மலேசியப் பாண்டியனுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ராஜபார்வை படத்தை OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவதற்கான முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது. படத்தைத் தயாரிக்க ஆரம்பித்த தயாரிப்பாளர் முதல் இப்போது வாங்கியுள்ள தயாரிப்பாளர் வரை இந்த மூன்று பேரும் இயக்குனர் ஜேகேவும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈட்டுப்பட்டுள்ளார்கள் என்பது மலேசியா பாண்டியனுக்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவர்கள் மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் மலேசியா பாண்டியன்.. மேலும் ஊரடங்கைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இது போன்று வெளிநாட்டு உரிமைகளை விற்கும் நபர்கள் மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் விதமாகத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களும் தகுந்த கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் மலேசியா பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு இந்த விவகாரம் பற்றிக் கூறப்படுகிறது.

More News >>