விஜய் படம் மாற்றங்களுடன் ஒடிடியில் ரிலீஸ்..

நடிகர் விஜய், மோகன்லால் இணைந்து நடித்த படம் ஜில்லா. கடந்த 2014ம் ஆண்டு இப்படம் வெளியானது. சூப்பர் குட் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்தது. தமிழில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது, இப்படம் தெலுங்கிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டு தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தாவை வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால் அக்காட்சிகள் தமிழில் இணைக்கப்படவில்லை. அதேசமயம் சில பிரச்சனைகள் காரணமாக ஜில்லா படம் தெலுங்கில் அப்போது வெளியாகவில்லை. தற்போது அப்படத்தை ஒடிடிதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரம்மானந்தா நடித்த காட்சிகள் ஸ்பெஷலாக இணைக்கப்படுகின்றன.

சில காரணங்களால் அப்போது ஜில்லா படம் தெலுங்கில் வெளியாகவில்லை. எனவே தற்போது தெலுங்கில் வெளியாவதால் விஜய்யுடன் பிரம்மானந்தம் நடித்து நீக்கப்பட்ட காட்சிகள், மீண்டும் இணைக்கப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை நீசன் இயக்கி இருந்தார். இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.

More News >>