டெங்கு காய்ச்சலால் செத்தார்களா? ஆதாரம் காட்டுங்கள்! - அமைச்சர் ஆவேசம்

டெங்கு காய்ச்சல் நோயால் யாரும் சாகவில்லை என்றும் செத்திருந்தால் ஆதாரம் காட்டுங்கள் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சீனிவாசன், ”திண்டுக்கல் மாவட்டத்தில் யாரும் டெங்கு காய்ச்சலால் சாகவில்லை என்றும் 4 பேர் வைரஸ் காய்ச்சலால் இறந்துள்ளனர்” என்றார்,

இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 45க்கும் மேற்பட்டவர்கள் டெங்குகாய்ச்சலால் இறந்துள்ளார்கள். ஆனால் நீங்கள் டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை என்ற கூறுகிறீர்களே என்று செய்தியாளர் கேட்டபோது, அந்த நோயாளிகள் மூளைக்காய்ச்சல், கல்லீரல் அலர்ஜி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

பழனி பகுதியில் காவலப்பட்டி, பெரியப்பாநகர், தாமரைக்குளம், ஏ.கலையமுத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் இறந்த குழந்தைகள் டெங்கு காய்ச்ச லால் இறந்ததாக கூறுகிறார்கள் என்று செய்தி யாளர்கள் தெரிவித்தனர்.

டெங்கு காய்ச்சலால் இறந்ததாக யாராவது ஆதாரம் வைத்திருக்கிறார்களா? அப்படி ஆதாரம் வைத்திருந்தால் காட்டுங்கள். டெங்கு காய்ச்சலால் யாரும் சாகவில்லை என்று நான் சவால் விடுகிறேன் என்று சீனிவாசன் கூறினார்.

More News >>