ஷோலே பட காமெடி நடிகர் ஜெகதீப் காலமானார்.. சூர்மா போபாலி கதாபாத்திரத்தில் நடித்தவர்..

பாலிவுட்டில் 70, 80களில் பிரபல நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர் சையத் இஷ்டியாக் அகமது ஜாஃப்ரி என்கிற ஜகதீப்பால். இவரது நகைச்சுவைக்கென்று தனி மவுசு இருந்தது. 81 வயதாகும் அவர் நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். வயது தொடர்பான பிரச்சனைகள் காரணமாக ஜகதீப் நேற்று இரவு இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். மும்பையில் உள்ள ஷியா கப்ரிஸ்தானில் ஜகதீப் இன்று உடல் அடக்கம் நடக்கிறது.

ஜக்தீப் 1970 மற்றும் 80 களில் மற்றும் 90 களில் கூட பல பெரிய பாலிவுட் படங்களில் குறிப்பிடத்தக்கப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார் அவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தர்மேந்திரா. அமிதாப்பச்சன் நடித்த ஷோலே (1975) படத்தில் சூர்மா போபாலி என்ற பாத்திரத்தில் நடித்தார், மேலும் 1988 ஆம் ஆண்டில் சூர்மா போபாலி என்ற அதே பெயரில் ஒரு படத்தை இயக்கினார். இப்படத்திலும் அவர் பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடித்தார்.

மறைந்த ஜகதீப் மார்ச் 29, 1939 இல் பிறந்தார். இவருக்கு மகன்கள் ஜாவேத் ஜாஃப்ரி மற்றும் நவேத் ஜாஃப்ரி உள்ளனர். ஜகதீப்பின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் அஜய் தேவ்கன், "ஜகதீப் சாபின் மறைவின் சோகமான செய்தியைக் கேட்டேன். அவரை எப்போதும் திரையில் பார்த்து ரசித்தேன். அவர் பார்வையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தார். ஜாவேத் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஜெகதீப் சாபின் ஆத்மாவுக்கான பிரார்த்தனைகள் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் பல்வேறு நடிகர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

More News >>