இந்தியாவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் இது வரை 21,129 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் நூறு நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தினமும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே போல், மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனினும், மத்திய அரசும், மாநில அரசும் கொரோனாவால் இறப்பவர்கள் மற்ற நாடுகளை விடக் குறைவு என்று சப்பைக்கட்டுக் கட்டி வருகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று(ஜூன்8) புதிதாக 24,819 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு மேல் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2.69 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோய்க்கு நேற்று 487 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் இது வரை 21,129 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மாசேசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய ஆய்வு முடிவுகளில், இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கொரோனா பரவல் நீடிக்கலாம். அந்த சமயத்தில் தினமும் 2.87 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறது. எனினும், இது தற்போதைய நிலை தொடர்ந்தால் ஏற்படக் கூடிய அபாயம் என்றும் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் பாதிப்பு குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

More News >>